iththunai dUram vandadE perum pADu -en
kaNNA unai nOkki nAn
mAyai veLLaththil edir nIchal pOttu
en kAyam manadhellAm thaLLarndE pOchu
oru kaNaththil kai koDuththu karai yEtruvAi
Or ezhuththu uDaiya peyar uDaiyOnE
oruvanAi Alilayil minji irundhAi
nanDru nanDru enDru nAn sollumpaDi inDrE seivAi
இத்துனை தூரம் வந்ததே பெரும் பாடு - என்
கண்ணா உனை நோக்கி நான்
மாயை வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு
என் காயம் மனதெல்லாம் தளர்ந்தே போச்சு
ஒரு கணத்தில் கை கொடுத்து கரை ஏற்றுவாய்
ஓர் எழுத்து உடைய பெயர் உடையோனே
ஒருவனாய் ஆலிலையில் மிஞ்சி இருந்தாய்
நன்று நன்று என்று நான் சொல்லும்படி இன்றே செய்வாய்