கேட்பார் இல்லையோ என் புலம்பல் தன்னை - அதனை
கேட்டும் என்னை திரும்பி பார்பார் இல்லையோ
கண்ணா நீயும் தான் கேட்காதிருந்தாயோ - அல்லது
கேட்டும் கேட்காதது போல் இருந்தனையோ
கேட்டு கேட்டு பார்த்து நான் சலித்து விட்டேன் - ஆனாலும்
கேட்காமல் இருக்க மனம் கேட்க மறுக்கின்றது
கேடு கெட்ட எனக்கும் கேட்டதை கொடுத்து
கேட்டதை கொடுப்பவன் என்று பறை சாற்றிக் கொள் நீயே
kEtpAr illaiyo en pulambal tannai- adhanai
kEttum ennai tirumbi paarpaar illaiyO
kaNNaa neeyum daan kEtkAdirundAyO- alladhu
kEttum kEtkaadadu pOl irundanaiyO
kEttu kEttu pArthu nAn saliththu vittEn- AnAlum
kEtkAmal irukka manam kEtka marukinDradhu
kEDu ketta enakkum kEttadhai koDuththu
kEttadhai koDuppavan enDru parai sAttrikoL nIyE